Friday, 27 September 2013

Velai Job - Konjam paddinga boss

வேலை இல்லாதவன் தான், வேலை தெரிஞ்சவன் தான், வீரமான வேலைக்காரன்    

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு பைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2.
அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3.
கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4.
அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும்.கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள். 
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6.
அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7.
எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8.
கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9.
உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள். 10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11.
ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12.
சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13.
உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14.
செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15.
கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள். 16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (
வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18.
இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்    

 

---------Vijay thanks for sharing the informative one :) 

Friday, 20 September 2013

Launches facility to view PF A/Cs service online



வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செய்துகொள்ளும் வசதி இப்போது வந்துவிட்டது. பி.எஃப். கையிருப்பு தொகையை அறிந்துகொள்வது, க்ளைம் நிலை, குறைகளைப் பதிவு செய்வது, நிதிப் பரிமாற்றம் போன்ற சேவைகளை ஆன்லைனில் கொண்டுவந்துள்ளது பி.எஃப். அமைப்பு. இந்தச் சேவை குறித்து சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கமிஷனர் எஸ்.டி.பிரசாத் விரிவாக விளக்கிச் சொன்னார்.
''பி.எஃப். என்பது ஓய்வுக்கால தேவை களுக்காகத்தான். இன்றையச் சூழ்நிலையில் ஒரே நிறுவனத்தில் ஓய்வுக்காலம் வரை வேலை பார்ப்பது குறைவாகவே உள்ளது. பலரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போதும், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலை மாறும்போதும் பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்களுடைய ஓய்வுக்காலத்திற்கான தொகை போதிய அளவுக்கு கிடைப்பதில்லை.  
ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டு காலம் பி.எஃப். கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தியிருந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். அத்துடன் பணிக் காலத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டு அதனால் உடலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலும் அவரது குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்கும்.  
பி.எஃப்.-ன் அவசியம் என்ன என்பது குறித்த விழிப்பு உணர்வு இல்லாததாலும், கணக்கிலிருந்து பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்க முடியும் என்பதாலும் பலரும் பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எளிதாக எடுக்கிறார்கள்.

இன்னும் சிலர் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலை மாறும்போது அதுவரை சேர்த்த பணத்தை மாற்றாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதுமாதிரியான பல பிரச்னைகளுக்கு தீர்வுதான் ஆன்லைன் பரிவர்த்தனை'' என்றவர், இதன்மூலம் கிடைக்கும் புதிய வசதிகள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
''பி.எஃப். இணையதளத்தில் ஏற்கெனவே க்ளைம் நிலை, பேலன்ஸ் தொகை பார்க்கும் வசதி, இ-பாஸ்புக் என பல வசதிகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் க்ளைம் வருவதுதான் எங்களுடைய மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. மேலும், ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை மாற்றும்போது  எந்த படிவத்தை எதற்கு பூர்த்தி செய்து தரவேண்டும் என்ற விவரம் பலருக்கும் சரியாகத் தெரியாததால் இதுபோன்ற சிக்கல்கள் இருந்து வந்தன. இதற்கு தீர்வாக ஒரு கணக்கிலிருக்கும் தொகையை இன்னொரு கணக்கிற்கு எளிதாக இனி மாற்றிக்கொள்ளும் வசதியை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறோம்.
ஓர் அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு பி.எஃப். கணக்கை மாற்ற  படிவம் 13-ஐ பூர்த்தி செய்து தரவேண்டும். (இந்த விண்ணப்பம் பெற http://www. epfindia.gov.in/WhichClaim.html-க்கு செல்லுங்கள்!) ஆன்லைன் சேவையைப் பெற செல்போன் எண் மற்றும் அரசு வழங்கிய பான் கார்டு, பாஸ்போர்ட், ஒட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை என 14 வகையான சான்றுகளில் ஏதாவது ஒன்றை தந்து பதிவு செய்யலாம்.
இதில் செல்போன் எண்தான் மிக முக்கியம். ஓர் எண்ணுக்கு ஒரு ஐ.டி.யைதான் உருவாக்க முடியும். ஒரு உறுப்பினர் அதிகபட்சமாக 10 பி.எஃப். கணக்கைப் பார்க்க முடியும். அதாவது, வெவ்வேறு நிறுவனத்தில் வேலை பார்த்து அங்குள்ள கணக்குகளின் நிலையைப் பார்க்க முடியும். பல கணக்குகளை வைத்திருப்பவர்கள் அதை ஒரே கணக்கு எண்ணிற்கு மாற்றம் செய்துகொள்வது நல்லது.  
இந்தப் புதிய வசதியின் மூலமாக ஒருவர் மார்ச் 2013 வரையிலான வட்டியுடன் கூடிய தொகையைப் பார்க்க முடியும்.   ஏப்ரல் 2013-க்கு பிறகு வட்டி சேராத பி.எஃப். தொகை மட்டும் வரவு வைக்கப்பட்டிருக்கும். மேலும், செயல்பாட்டில் இல்லாத கணக்கு குறித்த தகவல்களைக் கேட்பவர்களுக்கு மட்டும்தான் தருகிறோம். உறுப்பினர் தவிர வேறு யாரும் இந்த சேவையைப் பெற முடியாது'' என்றவர், நிறுவனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள வசதிகள் குறித்தும் விளக்கினார்.
''நிறுவனத்தின் இயக்குநர்கள் தங்கள் கையெழுத்தை டிஜிட்டல் கையெழுத்தாக பதிவு செய்வது அவசியம். ஏனெனில், இனி ஆன்லைனில் பூர்த்தி செய்யப்படும் படிவத்தை டிஜிட்டல் கையெழுத்திட்டு அனுப்பினால்  செட்டில்மென்ட் விரைவாக நடக்கும்'' என்று முடித்தார்.
இதுநாள்வரை பி.எஃப். விஷயத்தில் பலரும் அனுபவித்த சிக்கல்கள் இனி இருக்காது என்பது நல்ல விஷயம்தானே!

Thursday, 12 September 2013

Singara Chennai New auto meter rate comparison

New auto meter rate comparison, Intha new auto meter rate varum aana varathu :)



Chennai Corporation introduce a bin tracking software timely pick up and clearing of bins

Chennai Corporation as a part of its SWM initiative is pleased to introduce a bin tracking software which would ensure timely pick up and clearing of bins. The timely clearance of bin is monitored by the Corporation of Chennai through centralized monitoring facility. The photograph of the bins cleared are taken and uploaded. The bins that have not been cleared on time are coloured red which enables the Corporation to take timely remedial action. As a pilot, the bin tracking system is introduced in Zones-9, 10, 13 and would be subsequently extended to the entire corporation area. The system is still on a trial run, however, Corporation solicits active public participation in emerging garbage free Chennai through a public led monitoring system. The public can log on www.cmsw.co.in and click on to the ‘bin map’ to know the real time data of number of bins cleared in any given area. Cleared bins are marked green and uncleared are marked red. The site provides a provision to register the complaints regarding non/delayed clearance of bins or call a toll free Corporation complain No. 1800-425-1566 or Corporation complaint No.1913 can also be used to register the complaints.